ETV Bharat / state

ரெட் அலர்ட் எதிரொலி: சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து! - FLIGHT SERVICES CANCELLED

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 1:38 PM IST

Updated : Oct 15, 2024, 2:11 PM IST

சென்னை: சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்டை விடுத்துள்ளது.

சென்னையில் பெய்துவரும் கனமழை மற்றும் சூறைக்காற்று போன்றவற்றால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலைய உயர் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பி வரும் வானிலை அறிக்கைகளின் அடிப்படையில், விமான சேவைகளைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் செல்லும் 4 விமானங்களும், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்து கொழும்பு மற்றும் விசாகப்பட்டினத்துக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதால், பயணிகள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்பாடு நேரங்களை அறிந்து கொண்டு, பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நாளை இல்லை இன்றைக்கே ரெட் அலர்ட்" - சென்னை மக்களே உஷார்

ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள்:

நேரம்வழித்தடம்விமானம்
காலை 7.05பெங்களூரு - சென்னைஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம்
பகல் 01அந்தமான் - சென்னைஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
மாலை 3.20 டெல்லி - சென்னைஇண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
அதிகாலை மஸ்கட் - சென்னைஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
காலை 7.45 சென்னை - அந்தமான்ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
பகல் 1.40 சென்னை - பெங்களூருஆகாஷா பயணிகள் விமானம்
காலை 8.40சென்னை - மஸ்கட் ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
மாலைசென்னை - டெல்லிஇண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 15, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.