ETV Bharat / state

"மற்ற மாநில மாணவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு தமிழக அரசு உதவி"- வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள்! - Bangladesh violence issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 8:59 AM IST

Updated : Jul 24, 2024, 9:29 AM IST

TN Students Return to State from Bangladesh: வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 35 பேர் 3ஆம் கட்டமாக சென்னை திரும்பினர். சென்னை திரும்பிய தமிழக மாணவர்கள் வங்கதேச நிலவரம் குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தனர்.

வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள்
வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் போராட்டம் மற்றும் கலவரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உயர் கல்விக்காக வங்கதேசம் சென்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், தமிழர் நலன் மற்றும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது, இந்திய மாணவ - மாணவிகள், தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப இயலாத சூழலில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம், வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ள, வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அழைத்து வர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வங்கதேசத்திலிருந்து முதற்கட்டமாக 21ஆம் தேதி 49 தமிழக மாணவர்களும், 22ஆம் தேதி இரண்டாவது கட்டமாக 82 மாணவர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது நாளான நேற்று 35 மாணவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து சென்னை அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்தனர்.

அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பர்வேஸ் கூறுகையில், "வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டைத் தடுப்பதற்கு கலவரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், அங்குள்ள மற்ற நாட்டு மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து அங்கு படிக்கும் படிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வங்கதேசத்தில் எல்லையோரம் உள்ள மாணவர்களை அகர்தலா அழைத்து வரப்பட்டது. அங்கு வந்த மாணவர்களுக்கு அவரவர் சார்ந்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, இலவசமாக இல்லம் வரை அழைத்துச் சென்று விடுகின்றனர்.

மற்ற மாநிலங்கள் இதுபோன்று மாணவர்களுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. அதனால், சில மாநிலத்தின் மாணவர்கள் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு இவ்வளவு உதவி செய்கிறது என பொறாமைப்பட்டனர். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் வசித்த பகுதியில் வெளியில் போக முடியாத சூழ்நிலை இருந்தது. அங்கு மின்சாரம், இன்டர்நெட் எதுவும் இல்லை, கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து இருந்தனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் எங்களை ஒருங்கிணைத்து உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர்" எனத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர் ராம் கிஷோர் கூறுகையில், "நாங்கள் வசித்த பகுதியில் மின்சாரம் இன்டர்நெட் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. உணவுக்குக் கூட வெளியில் போக முடியாத சூழ்நிலை இருந்ததால், அனைவரும் அவதிக்குள்ளாகி இருந்தோம். அப்பொழுதுதான் மத்திய மாநில அரசு இணைந்து எங்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்துள்ளனர்.

மேலும், விசா கிடைக்காததால் 2 கல்லூரி மாணவிகளால் தமிழ்நாடு வர முடியவில்லை, அவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும். தற்போது, இருவரும் அங்கு கல்லூரி விடுதியில் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் அவர்களும் வீட்டிற்கு வரவேண்டும் என நினைத்த நிலையில், விசா கிடைக்காததால் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களையும் தமிழ்நாடு அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து, வினிஷா என்ற மாணவி கூறுகையில், "வங்கதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தமிழ்நாடு அரசு எல்லா வகை உதவிகளையும் செய்தனர். இன்னும் சிலர் அங்கே சிக்கியுள்ளனர். அவர்களையும் மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும். அங்கே சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு வந்துள்ளதால் நிம்மதியாக இருக்கின்றோம். மத்திய, மாநில அரசு உத்தரவின் பேரில் அங்கு போலீசார் பாதுகாப்பாக தங்களை எல்லையில் அழைத்து வந்து விட்டனர். அங்கிருந்து தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: MSME முனைவோருக்கு மத்திய பட்ஜெட் எந்த அளவு சாதகம்? வல்லுநர்கள் கருத்து!

Last Updated : Jul 24, 2024, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.