ETV Bharat / state

காதலன் வீட்டில் கல்லூரி மாணவி மர்ம மரணம்.. சென்னையில் நடந்தது என்ன? - girl died in lover house - GIRL DIED IN LOVER HOUSE

chennai college girl death issue: சென்னையில் உடல்நிலை சரியில்லாத காதலனுடன் தங்கி பார்த்துக் கொண்டிருந்த காதலி மர்மமான முறையில் இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி ஸ்ரீஷா, சடலம் தொடர்பான(கோப்புப் படம்)
மாணவி ஸ்ரீஷா, சடலம் தொடர்பான(கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 12:03 PM IST

சென்னை: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன் (24). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரை தேனாம்பேட்டையை சேர்ந்த ஸ்ரீஷா (20) என்ற பெண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீஷா அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை ஸ்ரீசா உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.

பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மணிகண்டனுடன் அவரது தாய் ரேவதி மற்றும் ஸ்ரீஷா மூன்று பேரும் ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் அறையில் இருந்த ஸ்ரீஷா மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து, ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ராமாபுரம் போலீசார் அவரது தாய் ரேவதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீஷா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் ராமாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட காதலனை உடனிருந்து கவனித்துக் கொண்ட காதலி திடீரென மர்மமான முறையில் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மிகவும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கும் மக்கள்.. திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப்பாதைக்கான தீர்வு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.