ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவர்கள் தாயகம் திரும்பினர்! - fishermen released - FISHERMEN RELEASED

TN FISHERMEN RELEASED: இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

தாயகம் திரும்பிய மீனவர்கள்
தாயகம் திரும்பிய மீனவர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 1:09 PM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் மூன்று படகுகளில் சென்ற 17 மீனவர்களை கைது செய்தனர்.

இதையடுத்து இலங்கையில் உள்ள ஊர்காவல் படை நீதிமன்றத்தில் 17 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி 17 மீனவர்களை விடுவிக்கப்படுவதாக ஊர்காவல் படை நீதிபதி நீதிமன்றத்தில் அறிவித்தார். பின்னர் மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத்தது.

தொடர்ந்து அனைத்து மீனவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, எமர்ஜென்சி சான்றிதழ் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை, மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் முனுசாமி, மீனவர்களை வரவேற்று சால்வை அணிவித்து உணவு பொட்டலங்களைக் வழங்கினார். பின்னர் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவர்களைத் தனி வாகனம் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: வேலூர் அருகே ஒரே கிராமத்தில் 3000 ராணுவ வீரர்கள்.. கம்மவான்பேட்டை ராணுவப்பேட்டையாக மாறிய ரகசியம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.