ETV Bharat / state

"தவெக-வில் பெண்கள் முதன்மையானவர்கள்"- தஞ்சை பொறுப்பாளர் விஜய் சரவணன்! - TAMILAGA VETTRI KAZHAGAM

தமிழக வெற்றிக் கழகத்தில் நாங்கள் போடுவது நேர்மையான ராஜ நடை, கழகத்தில் பெண்கள் முதன்மையானவர்கள் என கட்சியின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் தெரிவித்துள்ளார்.

தவெக வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கிய   மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன்
தவெக வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கிய மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 11:59 AM IST

தஞ்சாவூர்: மாற்றுக்கட்சியினர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாராசுரம் பிராபாகரன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நேற்று, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி புதிய உறுப்பினர்களாக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களை பொறுப்பாளர் விஜய் சரவணன், தவெக சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை - செங்கல்பட்டு ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம்!

பின்னர், விழாவில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் பேசுகையில், “பெண்கள் உரிமைகள் பற்றி பேசிய கழகங்கங்கள், கட்சிகள், கட்சி தலைவர்கள் இருந்த போதும் அவர்கள் பெண்களுக்கு அளித்த இடம் 2-வது இடம்.

தமிழக வெற்றிக் கழகத்தில் நாங்கள் போடுவது நேர்மையான ராஜ நடை. கொள்கை வழிகாட்டி பெண்கள் என்பதால், இதுவரை யாரும் பெருமையோடு குறிப்பிடாத நிலையில், வீர மங்கை வேலு நாச்சியாரையும், கடலூர் அஞ்சலையம்மாளையும் குறிப்பிட்டு பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். தமிழக வெற்றி கழகத்தில் பெண்கள் முதன்மையானவர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.