வேலூர்: ஶ்ரீ நாராயணி பீடம், தங்க கோயிலில் அனைத்து மக்களும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ அக்டோபர் 6, 2021 முதல் இன்று (திங்கட்கிழமை) வரையில் லலிதா சகஸ்ர நாமம் யாகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று 1000 ஆவது நாளை முன்னிட்டு, ஸ்ரீபுரத்தில் உள்ள உள்ள ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு பூஜையில், அன்னை ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு 6 கிலோ தங்கத்தில், 1,000 தங்க காசுகளை கொண்ட தங்க பாவாடை ஸ்ரீ சக்தி அம்மா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஶ்ரீ சக்தி அம்மா, “ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு தொடர்ந்து ஆயிரம் நாட்களுக்கு யாகம் நடத்தப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் யாகத்தை கண்டுள்ளனர். மழைக்காலங்களிலும் இந்த யாகம் தடை இன்றி நடைபெற்றுள்ளது. இந்த லலிதா சகஸ்ர யாகம் மேற்கொள்வது என்பது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த யாகத்தினால் பிரபஞ்சம் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறது.
தெய்வீகமான செயல்களுக்கு நாம் அன்பு கொடுத்தால் போதுமானது. எந்த செயல் மேற்கொண்டாலும் அதில் தெய்வீகத்தின் அருள் இருக்க வேண்டும். பக்தர்கள் கடவுளுக்கு பழங்கள் அடங்கிய தட்டு வைக்கின்றனர்.
அதுதான் முதல் தட்டு என்பது கிடையாது. ஏனென்றால், கடவுள் இருக்கும் இடத்தில் அளவில்லா பழங்கள் இருக்கின்றன.
ஆனால், பக்தர்கள் வைக்கும் அந்தப் பழங்கள் என்பது ஒரு அன்புக்குரியது. மொத்த பிரபஞ்சமும் தெய்வீகத்திற்குள் வருகிறது. ஆயிரம் நாள் தொடர்ந்து யாகம் நடைபெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் பக்தர்கள் கடவுளின் அருளை பெற்றிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: தக்காளி, வெங்காயம் விலை சரிவு... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?