ETV Bharat / state

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 7:26 PM IST

Updated : Mar 9, 2024, 7:47 PM IST

DMK Congress Alliance: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் உறுப்பினர் சேர்க்கை என பலகட்ட வேலைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, தமிழகத்தில் பிரதான கட்சியாக இருக்கிறது. எனவே, தமிழகத்தில் திமுக தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக - காங்கிரஸ் இடையே கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி, அவற்றில் 14 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, ஒரு மாத காலமாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இதனிடையே, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர் மோதல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்பட பல காங்கிரஸ் நிர்வாகிகள் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, நேற்றைய தினம் 39 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதன் அடிப்படையில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், இந்த பட்டியலில் தமிழ்நாடு தரப்பு பெயர்கள் வெளியாகவில்லை.

காரணம், தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அஜய்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை வந்தனர். இதனையடுத்து, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, மாலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டு குழுவினர் உடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதியும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான உடன்படிக்கையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் இதுவரை;

திமுக - 21

காங்கிரஸ் - 10

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 2

மதிமுக - 1

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1 - ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 - நாமக்கல்

மக்கள் நீதி மய்யம் - 1 மாநிலங்களவை

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி உறுதி!

Last Updated : Mar 9, 2024, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.