தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அப்பகுதியை சேர்ந்த சிலர் வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் பேரில் வாசுதேவநல்லூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர் சோதனையில் டேட்டா எண்ட்ரி என்ற பெயரில் 10 வேப்டாப்கள், 19 ஆண்ட்ராய்டு மொபைல்கள் உள்ளிட்ட எலக்டிரானிக் சாதனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், சங்கனாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பசுபதி (29), கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வ முருகன் (26), மேட்டுப்பட்டி சேர்ந்த மாரிச்செல்வம் (30), ஆகியோரும், அவர்களிடம் வேலை செய்த பெண்கள் ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என காவல்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றாலும் தொடர்ந்து இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது வருத்தத்துக்குரியதாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு! - Match Box Allocated For MDMK