ETV Bharat / sports

4 மணி நேரத்தில் 2 கிலோ எடை குறைத்த மேரிகோம்! குறைந்த நேரத்தில் எடையை குறைப்பது எப்படி? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

குறிப்பிட்ட அளவை காட்டிலும் எடை அதிகமாக இருந்ததால் பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு ஒரு போட்டியின் போது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 4 மணி நேரத்தில் 2 கிலோ எடையை குறைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Etv Bharat
Mary Kom - Vinesh Phogat (PTI, AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 4:52 PM IST

பிரான்ஸ்: அதிக எடை காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு எடை எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது. 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் கூடுதலாக 150 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட போட்டிப் பிரிவுகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு எடை என்பது எவ்வளவு முக்கிய என வினேஷ் போகத் சம்பவம் தற்போது உலகிற்கு உணர்த்தி உள்ளது. அதேநேரம் உரிய எடையை எட்ட வீரர், வீராங்கனைகள் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு துயர் துன்பங்களை சந்திக்கின்றனர் என்பதையும் தற்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

ஒரு முறை சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள 4 மணி நேரத்தில் 2 கிலோ எடையை குறைத்ததாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்து உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு போலந்தின் சிலசியனில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டார்.

48 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம், அந்த போட்டிக்கான எடையை காட்டிலும் கூடுதலாக இருந்துள்ளார். இதனால் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட மேரி கோம் 4 மணி நேரத்தில் 2 கிலோ எடையை குறைத்து அந்த போட்டியிலும் கலந்து கொண்டு உள்ளார்.

இறுதியில் அந்த போட்டியில் மேரிகோம் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்காக பெருமை சேர்த்தார். அந்த பதக்கம் வெல்லும் போது மேரி கோமுக்கு இரண்டு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த நேரத்தில் எடையை குறைப்பது எப்படி?

விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு எடை பெரும் தலைவலியாக உள்ள நிலையில், குறைந்த நேரத்தில் எடையை குறைப்பதற்கு சில வழிகள் கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரத்யேக உடை அணிந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் போது சாதாரணமாக வரும் வியர்வையை காட்டிலும் அதிக வியர்வையை அது வெளியேற்றி உடல் எடையை விரைவாக குறைக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இருப்பினும், அதுபோன்ற FBT சூட்டுகளை போடும் போது வீரர் வீராங்கனைகள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக சொல்லப்படுகிறது. உடலில் அதிகளவில் வெப்பத்தை உருவாக்குவதாலும் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு வீரர்கள் ஆளாவதாகவும் கூறப்படுகிறது. உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைப்பதாலும், நீரிழப்பை ஏற்படுத்துவதாலும் வீரர் வீராங்கனைகள் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டி உள்ளதாகவும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறையும் போது தானாக உடல் எடையும் குறையும் எனக் கூறப்படுகிறது.

வினேஷ் போகத் விவகாரத்தில் என்ன நடந்தது?

வினேஷ் போகத் விவகாரத்தில் அவருக்கு போதிய நேரம் கிடைக்காத நிலையில், உடல் எடையை குறைக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று போட்டிகளில் கலந்து கொண்ட வினேஷ் போகத், ஓய்வு இன்றி மறுநாளே இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டி இருந்ததால் உடல் எடையை குறைக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: நாடு திரும்பிய மனு பாக்கர் மீண்டும் பாரீஸ் பயணம்! என்ன காரணம் தெரியுமா? - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.