ETV Bharat / sports

கிரிக்கெட்டில் ஒரேயொரு விராட் கோலி தான்.. கூறினாரா கோலி? டீப் பேக் வீடியோவால் சர்ச்சை! - Virat Kohli deepfake video - VIRAT KOHLI DEEPFAKE VIDEO

Virat Kohli deepfake video: இந்திய வீரர் சுப்மான் கில் குறித்து விராட் கோலி கோபமாக பேசும் டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Virat Kohli (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 2:09 PM IST

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் குறித்து நட்சத்திர வீரர் விராட் கோலி காட்டமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், விராட் கோலி என்பவர் ஒருவர் மட்டுமே தன்னைப் போன்று வரவேண்டும் என்றால் அதற்கு சுப்மான் கில் நீண்ட ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான வீடியோவில், சுப்மன் கில் எனக்கு அளித்த வாக்குறுதியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருவதாகவும், அதேநேரம் தனக்கே உரித்தான பாணியை கடைபிடித்து வரும் சுப்மன் கில் வரும் தலைமுறையினருக்கு ஒரு அடையாளமாக தன்னை முன்னிறுத்தி உள்ளார் என்றும் விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

ஆனால் டீப் பேக் வீடியோவில், நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய போது, சுப்மன் கில்லின் விளையாட்டு குறித்து அறிந்தேன், சுப்மான் கில்லை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில் அவர் திறமையானவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நம்பிக்கைக்குரிய வீரர் ஆவதற்கும் ஒரு ஜாம்பவானாவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

சுப்மான் கில்லின் ஆட்டத்திறன் நுட்பமானதாக இருந்தாலும் அது முன்னேற்றத்திற்கான வழியாக இல்லை. அவரை அடுத்த விராட் கோலி என மக்கள் பேசுகிறார்கள், ஆனால் ஒரே ஒரு விராட் கோலி மட்டுமே இருக்கிறார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் கடினமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டேன், கடினமான சூழ்நிலையில் செயல்பட்டேன்.

மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து விளையாடி வருகிறேன், நீங்கள் ஒரு சில நல்ல இன்னிங்ஸ் விளையாடினீர்கள் என்பதன் மூலம் அதை மாற்ற முடியாது. நான் தவறான முடிவை எடுத்தால், நான் நாள் முழுவதும் வெளியே உட்கார்ந்து கைதட்டுகிறேன். இந்திய கிரிக்கெட்டில், முதலில் கடவுளாக சச்சின் டெண்டுல்கர், பிறகு நான் இருக்கிறேன். அதுதான் அளவுகோல். அந்த நிலையை எட்டுவதற்கு முன் சுப்மான் கில் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று விராட் கோலி தெரிவிப்பது போல் வீடியோவில் உள்ளது.

இந்நிலையில், இந்த டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோக்களின் கீழ் ரசிகர்கள் இது எடிட் செய்யப்பட்ட வீடியோ யாரும் இதை பகிர வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர். டீப் பேக் வீடியோ தொடர்பாக போலீசில் விராட் கோலி சார்பில் புகார் ஏதும் அளிக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024: தமிழக வீரர்கள் யாரார் பங்கேற்பு! கோலாகல தொடக்க விழா! - Paralympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.