டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், இறுதிப்போட்டி வரை சென்ற வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம் முடிவு காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இதனையடுத்து, தகுதி நீக்கம் உத்தரவை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். ஆனால், முதலில் தகுதி நீக்கம் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வினேஷ் போகத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் எனக் கோரி வினேஷ் போகத் முறையிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நடுவர் நீதிமன்றம், நேற்று இரவு 9.30 மணிக்கு இறுதித் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்தது. அந்த வகையில், தீர்ப்பு 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவித்த சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வினேஷ் போகத்தின் முறையீட்டை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தள்ளுபடி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் விவகாரம்; தீர்ப்பு 3வது முறையாக தள்ளி வைப்பு!