டெல்லி: 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்லுமா? இல்லையா? என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்பதால் இந்திய அணியை தங்கள் நாட்டுக்கு வரவழைப்பது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் சாம்பியன்:
கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
தீவிரவாத தாக்குதல்:
கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. கடந்த ஆண்டு கூட பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஹபிரிட் மாடலில் இலங்கையில் நடத்தப்பட்டது.
மத்திய அரசு முடிவு என்ன?:
இந்நிலையில், இந்தியாவை எப்படியாவது நாட்டுக்கு வரவழைக்க பாகிஸ்தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர் கேள்விகள் மூலம் பிசிசிஐயை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துளைத்து எடுத்து வருகிறது. மத்திய அரசு அனுமதி கொடுத்தால் பாகிஸ்தானில் விளையாட தயார் என பிசிசிஐ தெரிவித்த போதிலும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை.
India's Home Minister Amit Shah said - " we are not in favour of holding talks with pakistan until terrorism is completely does not end". (sports tak).
— Tanuj Singh (@ImTanujSingh) September 6, 2024
- this indicates that team india will not go to pakistan for the champions trophy 2025...!!!! pic.twitter.com/K6UjxDfEAj
உள்துறை அமைச்சகம் என்ன கூறுகிறது?
இந்நிலையில், பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்திய அணியை அனுமதிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தானில் தீவிரவாதம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் வரை அந்நாட்டுக்கு ஆதரவாக எந்தவொரு செயலிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்தார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என உறுதியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! - Paralympics shot put Bronze medal