ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தமிழருக்கு பெருமை தான்.. எப்படி தெரியுமா? - TAMILNADU CRICKETERS IN IPL - TAMILNADU CRICKETERS IN IPL

Tamilans in IPL Playoff: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளில் வருண் சக்கரவர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்தி உள்ளிட்ட தமிழக வீரர்கள் சிறப்பாக பங்காற்றியுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் புகைப்படம்
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் புகைப்படம் (credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 4:35 PM IST

சென்னை: இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசனின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றானது இன்று தொடங்கவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இந்த நான்கு அணிகளிலுமே தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவலாக உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் யார்க்கர் புகழ் நடராஜனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றுள்ளனர்.

வருண் சக்கரவர்த்தியை பொறுத்தமட்டில், 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த தொடரில் தன் பந்து வீச்சீன் மூலம் அனைவராலும் கவரப்பட்டார். பின்பு, பஞ்சாப் கிங்ஸில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டு, 2020-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார். இந்த அணியிலும் தன் மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கச் செய்தார். 7 விதமான வேரியேசன்களில் பவுலிங் செய்யும் திறமை பெற்றுள்ள இவர், 2021ஆம் ஆண்டு இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார்.

பின்னர், இந்தியாவிற்காக இலங்கைக்கு எதிரான டி20-ல் களமிறங்கினார். தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு தன் பங்களிப்பினை அளித்துவரும் வருண் சக்கரவர்த்தி, நடப்பு சீசனில் 18 விக்கெட்டுகள் எடுத்து 8.83 எகானமியுடன் அசத்தி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு இவரின் பங்களிப்பு இன்றியமையாதது.

யார்க்கர் நடராஜன்: அடுத்ததாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரரான நடராஜன் தன் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சால் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, அதில் தன் முழுத் திறமையையும் வெளிகாட்டினார்.

பின்பு, 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்த இவர், ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் தன் யார்க்கர் பந்து வீச்சின் மூலம் சிறந்த எகானமியுடன் போடக்கூடிய பவுலர் என்ற பெயரை பெற்றார். அதன் மூலம் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தன் அறிமுக டி20 போட்டியில், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகள் எடுத்து 9.25 எகானமியுடன் தன் அணியை பிளே ஆஃப் நோக்கி கூட்டிக்கொண்டு வந்துள்ளதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்: தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இவர், 100 டெஸ்ட் போட்டியில் 516 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 116 போட்டிகள் விளையாடி 156 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

மேலும், டி20 போட்டிகளில் 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தற்போது ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடி வரும் அஸ்வின் இதுவரை 7 விக்கெட் எடுத்து 8.61 எகானமி வைத்திருக்கிறார். பேட்டிங்கிலும் தன்னால் முடிந்த வரையிலான பங்களிப்பை அளித்து வருகிறார்.

தினேஷ் கார்த்தி: இந்த வரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்தி, ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் இந்திய அணியில் 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி டெஸ்ட் போட்டியில் 1,025 ரன்களும், ஒருநாள் தொடரில் 1,752 ரன்களும், டி20 தொடர்களில் 682 ரன்களும் அடித்து இருக்கிறார். இவர் 2018 முதல் 2020 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை பலமுறை வெற்றி பெற செய்திருக்கிறார். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் களமிறங்கி மொத்தம் 315 ரன்கள் வரை அடித்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் 83 ரன்கள் அடித்தது இந்த தொடரில் இவரின் சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் நுழைவதற்கு இவரின் அதிரடி ஆட்டம் ஒரு முக்கிய பங்காகும்.

இவ்வாறு பிளே ஆஃப்க்குச் சென்ற நான்கு அணிகளிலும் வருண் சக்கரவர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்தி உள்ளிட்ட தமிழக வீரர்களின் பங்களிப்பானது, அணியை பிளேஆஃப் சுற்று வரை கொண்டுவர உதவியாக இருந்தது மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

இதையும் படிங்க: குவாலிபையர் 1ல் KKR VS SRH.. வெல்லப்போவது யார்? அகமதாபாத் மைதானம் ஓர் அலசல்! - SRH VS KKR

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.