ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 66வது போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக போட்டியானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் எலிமினேட் ஆகிவிட்டது. மறுமுனையில் ஹைதராபாத் அணி இன்று ஒரு புள்ளி பெற்ற நிலையில், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம், 4வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். அந்த ரேசில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகள் உள்ளன. இந்த ரேஸ் வர இருக்கும் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை வைத்து முடிவாகும்.
இதையும் படிங்க: தோனியின் இறுதிப்போட்டி சென்னையில் நடக்க மற்ற அணிகள் என்ன செய்ய வேண்டும்? - Ipl Playoff Chances