அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 71வது போட்டி இன்று (மே 19) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் டிராவிட் ஹெட் பெவிலியன் திரும்ப, ராகுல் திரிபாதி களம் கண்டார். பின் அபிஷேக் ஷ்ர்மா வைபவ் பந்தை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.
ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி திணறியது. 4 ஓவர் முடிவிற்கு 33-2 என்ற கணக்கில் விளையாடியது. நித்திஷ் ரெட்டி, அகமது இருவரும் பெரிதாக ரன்கள் எடுக்காமல் அவுட் ஆகினர். பவர் ப்ளேயில் ஹைதராபாத் அணிக்கு 4 விக்கெட்டுகள் சரிந்தன.
களத்தில் ராகுல் திரிபாதி - கிளாசன் இணைந்து அணிக்கு ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் அணிக்கு 50 ரன்கள் குவிந்தது. இதனிடையே, ராகுல் திரிபாதி தனது அரை சதத்தை பதிவு செய்தார். வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை ரிங்கு சிங்குவிடம் கொடுத்து கிளாசன் ஆட்டமிழ்ந்தார்.
கிளாசன் 21 பந்துகளுக்கு 32 ரன்களை எடுத்தார். அதன்பின் வந்த அப்துல் சமத் களம் கண்டார். ராகுல் திரிபாதி 55 ரன்களுக்கு அவுட் ஆக, பின்னர் வந்த சன்வீர் சிங் போல்ட் ஆனார். பின் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் களம் கண்டார்.
ஏற்கனவே களத்திலிருந்த அப்துல் சமத் அவுட் ஆக, அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 18 ஓவர் முடிவிற்கு 144-9 என்ற கணக்கில் விளையாடியது. 20வது ஓவரில் கம்மின்ஸ் அவுட் ஆக ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை குவித்தது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதி 55 ரன்களும், கிளாசன் 32 ரன்களும், கம்மின்ஸ் 30 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா அணியில், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், வைபவ், நரைன், ரஸ்ஸல், ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிபையர் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து! - Mariyappan Thangavelu