ETV Bharat / sports

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51வது பிறந்தநாள்.. கடந்து வந்த சாதனை பயணம்! - SACHIN TENDULKAR - SACHIN TENDULKAR

Happy Birthday Sachin: 'கிரிக்கெட்டின் கடவுள்' என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இந்த நாளில் அவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகள் சிலவற்றை பார்ப்போம்.

HBD SACHIN TENDULKAR
Sachin tendulkar birthday special
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 10:18 AM IST

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய ஆரம்ப காலக் கட்டத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று ஆசைப்படார் என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா? ஆம் சச்சினின் முதல் ஆசையாக இருந்தது அதுதான். ஆனால் அவரை புகழ் பெற்ற பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி நிராகரித்துவிட்டார்.

இதன் பிறகே தனது பேட்டை எடுத்து சுழற்ற ஆரம்பித்தார் சச்சின். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அதன் பிறகு 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களை குவித்தார்.

அதே போல் 463 ஒரு நாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ் விளையாடி 18,426 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் டெஸ்டில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் என சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்துள்ளார். இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை.

1992 தொடங்கி 2007 வரை எத்தனையோ உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினுக்கு, கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனை போக்கும் விதமாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சச்சினுக்கு காணிக்கையாக்கியது.

சச்சினின் சாதனைகள்

  • ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் ரானி டிராபி ஆகிய மூன்றிலும் தான் ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஒரே இந்திய வீரர்
  • 1995-ல் ரூபாய் 31 கோடியே 5 லட்சம் மதிப்பிலான ஐந்தாண்டு சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர்
  • மிக இளம் வயதில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர், அப்போது அவருக்கு வயது 40
  • தன்னுடைய வாழ்கையில் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் கடந்த 2013 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • இதனை தொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக இந்திய அஞ்சல்துறை சிறப்பு தபால் மற்றும் சிறப்பு மினியேச்சர்கள் வெளியிட்டது.
  • 'Madam Tussauds Wax Museum' அருங்காட்சியகத்தில் சச்சினுக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. இந்த பெருமையைப் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் .

கிரிகெட்டின் மீது இருந்த அதீத ஆர்வம், தீவிர பயிற்சி, விடா முயற்சி ஆகியவைதான் கிரிக்கெட் உலகில் யாரும் நெருங்க முடியாத பல சாதனைகளுக்கு அவரை சொந்தக்காரர் ஆக்கியது. 1973 ஆம் ஆண்டு ஏப்.24 ஆம் தேதி பிறந்த, கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "தோல்வியால் துவளவில்லை" கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றி ரகசியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.