ஐதராபாத்: பிரான்ஸ் தலைகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.4) நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
F46 பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் சச்சின் கிலாரி 16.32 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. இதுவரை இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🥈 𝗦𝗔𝗖𝗛𝗜𝗡 𝗛𝗜𝗧𝗦 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥! Many congratulations to Sachin Sarjerao Khilari on securing his first-ever Paralympic silver medal.
— Sportwalk Media (@sportwalkmedia) September 4, 2024
🙌 He becomes the first Indian male shot putter to win a Paralympic medal in 30 years.
👉 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 @sportwalkmedia 𝗳𝗼𝗿… pic.twitter.com/NBb2G19jEq
தற்போது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரின் பதக்க பட்டியலில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது. அதேபோல், ஏறத்தாழ 30 ஆண்டுகளில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்திய வீரர் ஒருவர் குண்டு எறிதல் போட்டியில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வென்ற பதக்கங்கள்:
gold | silver | bronze | total |
3 | 8 | 10 | 21 |
இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்! - Rajashtan Royals coach Rahul Dravid