சண்டிகர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவடும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.13) சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
ராஜஸ்தான் ராயல்ஸ் : ஷிம்ரோன் ஹெட்மியர், தனுஷ் கோட்டியன், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், டிரென்ட் போல்ட், கேசவ் மகாராஜ், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.
பஞ்சாப் கிங்ஸ் : சாம் குர்ரன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க : ஐஎஸ்எல் கால்பந்து லீக்: பிளே ஆப், இறுதி போட்டிக்கான அட்டவணை வெளியீடு! - ISL Football Schedule