ETV Bharat / sports

டாஸ் வென்று ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு! சொந்த மண்ணில் கெத்து காட்டுமா சென்னை? - IPL2024 CSK vs RR Match Highlights - IPL2024 CSK VS RR MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Etv Bharat
IPL CSK vs RR Toss (Photo Credit: IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 3:18 PM IST

சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னை, ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளிடையே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டி நிலவுகிறது.

இதில், இன்று (மே.12) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 61வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசன் லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது இதுவே கடைசிப் போட்டி.

அதேபோல் டோனிக்கும் நடப்பு சீசனில் சென்னை மண்ணில் இதுதான் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதி போட்டியில் விளையாடும் பட்சத்தில் சென்னை அணி மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி ஏறத்தாழ வாழ்வா? சாவா? ஆட்டம் போன்றது தான்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான ரேசில் சென்னை அல்லது ராஜஸ்தான் அணி தொடர முடியுவும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது. இந்நிலையில், போட்டி முடிந்ததும் டோனி சென்னை ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் சென்னை மண்ணில் கடைசி லீக் ஆட்டம் என்பதால் டோனிக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் டோனி உரையாட உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்‌ஷனா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), ரியான் பராக், ஷுபம் துபே, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க: கிராண்ட் செஸ் டூர்; உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா.. 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! - Praggnanandhaa

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.