ETV Bharat / sports

வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பிரதமர் மோடி ஆறுதல்! - paris olympics 2024

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Narendra Modi (Left), Vinesh Phogat (Right) (ANI, AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 1:29 PM IST

ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை தேற்றும் வகையில் பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன, நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.

இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித் தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.

வலுவாக திரும்பி வாருங்கள், நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீதான பாலியல் புகார் குறித்து வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக எம்பியை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது அதை நோக்கி டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பேரணியாக சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்ட நிலையில், இன்று (ஆக.7) இரவு தங்கப் பதக்கத்திற்கான இறுதி போட்டியில் விளையாட இருந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. முன்னதாக கூடுதல் எடையை குறைக்க இரவு முழுவதும் கண் விழித்து ஸ்கிப்பிங், ஜாகீங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வினேஷ் போகத் மேற்கொண்டு உள்ளார்.

பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட போது போதும் அவரது முயற்சிகள் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வினேஷ் போகத் மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பேரிடியாய் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தால் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட் (Sarah Hildebrandt) இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாமலேயே தங்க பதக்கம் வெல்கிறார். அதேபோல் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தால் வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கல பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வினேஷ் போகத் தகுதி நீக்கம்! யாருக்கு பதக்கம் கிடைக்கும்? - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.