டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் 89.45 மீட்டர் எறிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Neeraj Chopra is excellence personified! Time and again he’s shown his brilliance. India is elated that he comes back with yet another Olympic success. Congratulations to him on winning the Silver. He will continue to motivate countless upcoming athletes to pursue their dreams… pic.twitter.com/XIjfeDDSeb
— Narendra Modi (@narendramodi) August 8, 2024
இதுதான் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பெறும் முதல் வெள்ளிப் பதக்கமாகும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5-ஆக உயர்த்துள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம், நடப்பு ஒலிம்பிக்கில் வெள்ளி என அடுத்தடுத்த பதக்கங்களைப் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீரஜ் சோப்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது" என பதிவிட்டுள்ளார்.
What a moment for Bharat!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 8, 2024
A Silver Medal for @Neeraj_chopra1. He has won his 2nd consecutive Olympic medal!
This incredible achievement is historic—no individual in independent Bharat has ever done it before in athletics. #Cheer4Bharat pic.twitter.com/kse90CBAEy
இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "நீரஜ் சோப்ரா தொடர்ந்து 2வது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இந்த நம்பமுடியாத வரலாற்றுச் சாதனை சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தனிநபரும் இதைச் செய்ததில்லை" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் தோல்வி.. ஆனால் உலக சாம்பியன்ஷிப் வாய்ப்பை கைப்பற்றிய இந்திய வீரர்!