ஐதராபாத்: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து சில வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். இந்த சாதனைப் பட்டியலில் இரண்டு இந்திய வீரர்களும் உள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.
மார்க் கிரேட்பேட்ச்: நியூசிலாந்தை சேர்ந்த மார்க் ஜான் கிரேட்பேட்ச், கடந்த 1988ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிபங்கினார். களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்சர் விளாசி சாதனை படைத்தார். நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 84 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள மார்க்பேட்ச் 2 ஆயிரத்து 206 ரன்கள் குவித்துள்ளார்.
இன்சமாம் உல் ஹக்: பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் உல் ஹக், கடந்த 1991 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தில் சிக்சர் விளாசினார். இன்சமாம் உல் ஹக் மொத்தம் 378 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 11 ஆயிரத்து 789 ரன்கள் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயான் மோர்கன் (இங்கிலாந்து): 2006ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட்டில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் விளாசி சாதனை படைத்து உள்ளார்.
ஜொனன் லாவ்: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜொனன் லாவ், 2008ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தில் சிக்சர் விளாசினார்.
ஜாவத் தாவூத்: கனடா வீரர் ஜாவத் தாவூத் 2010ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி சாதனை படைத்து இருந்தார்.
ரோவ்மேன் பவல்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவல் கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தனது கன்னி சிக்சரை விளாசி சாதனை படைத்தார்.
கே.எல்.ராகுல்: இந்த பட்டியலில் முதலாவது இந்திய வீரராக கே.எல்.ராகுல் தனது முதல் பந்திலேயே சிக்சர் விளாசி உள்ளார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தில் சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை கே.எல்.ராகுல் பெற்றார்.
கிரெய்க் வாலெஸ்: ஸ்காட்லாந்து வீரர் கிரெய்க் வாலெஸ் 2016ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட் முதல் பந்தில் சிக்சர் விளாசினார்.
ரிச்சர்ட் நகரவா: 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வே வீரர் ரிச்சர்ட் நகரவா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சாதனை படைத்தார்.
இஷான் கிஷன்: இந்த வரிசையில் இரண்டாவது இந்திய வீரர் இஷான் கிஷன். 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு திருப்பி சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டில் ஒரேயொரு விராட் கோலி தான்.. கூறினாரா கோலி? டீப் பேக் வீடியோவால் சர்ச்சை! - Virat Kohli deepfake video