பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
BREAKING Paris put on major storm alert during Olympic Games pic.twitter.com/6pLHlfJyyE
— AFP News Agency (@AFP) July 30, 2024
பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, மாலை 6 மணி முதல் கனமழை, பலத்த இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பிரான்சின் வானிலை ஆய்வு மையம் பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பெரிய புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த எச்சரிக்கையால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. புயல் தீவிரமடைந்து ஒரு மணி நேரத்திற்குள் 20 மில்லி மீட்டர் முதல் 40 மில்லி மீட்டர் வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாரீஸ் நகரில் தற்போது நான்காவது நாள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் தற்போது வரை 35 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் நிலவி வருகிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் ஈபிள் டவர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. அதேபோல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரான்சில் உள்ள மற்ற நகரங்களும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, மத்திய மற்றும் தெற்கு பிரான்ஸ் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சிசையை தாண்டி பதிவாகி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை வெல்ல வியூகம் வகுக்கும் இலங்கை! 3வது போட்டியில் யாருக்கு வெற்றி? - Ind Vs SL 3rd T20 Cricket