பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள், இந்திய நேரப்படி இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோளகமாகத் தொடங்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது ஒலிம்பிக் குழு.
குறிப்பாக பாரிஸின் திறந்தவெளி அரங்கில் ஒலிம்பிக் தொடக்க விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாககும். விழா தொடங்குவதற்கு முன்னரே, ஒரு சில போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வில்வித்தைக்கான தகுதி போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் அணி 2013 புள்ளிகள் பெற்று, காலிறுதி சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
The trio of Tarundeep Rai, Dhiraj Bommadevara and Pravin Jadhav have done a superb job by finishing in 3rd place, with a total score of 2013!
— SAI Media (@Media_SAI) July 25, 2024
Off to the quarter finals scheduled for July 29!
Keep chanting #Cheer4Bharat and let's cheer for our archers!#OlympicsOnJioCinema pic.twitter.com/VeU0FjjiCS
அதாவது தகுதி சுற்றுப் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி, நேரடியாகக் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் அந்த வகையில் இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதில் பொம்மதேவரா தீரஜ் 681 புள்ளிகள் பெற்று, தனி நபர் தரவரிசையில் 4ஆம் இடம் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக தருந்தீரப் 674 புள்ளிகளுடன் 14வது இடத்தையும், பிரவின் ஜாதவ் 658 புள்ளிகளுடன் 39வது இடத்தையும் பிடித்தனர்.
ஆண்கள் வில்வித்தை முதல் 4 இடம் பெற்ற அணிகள்: தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும், இந்தியா 2013 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும், சீனா 1998 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தையும் பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பெண்கள் வில்வித்தை: முன்னதாக சிறப்பாக விளையாடி இந்திய மகளிர் அணி 1983 புள்ளிகளைப் பெற்று 4வது இடம் பிடித்தது, இதன் மூலம் வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளுடன் 11வது இடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக பஜன் கவுர் 659 புள்ளிகளுடன் 22வது இடமும், தீபிகா குமாரி 658 புள்ளிகளுடன் 23வது இடமும் பிடித்து அசத்தியுள்ளனர்.
முதல் 4 இடம் பெற்ற அணிகள்: தென் கொரியா 2046 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் 1983 புள்ளிகளைப் பெற்று இந்தியா 4வது இடம் பிடித்தது.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்க விழா! முதல் நாளில் என்னென்ன நடக்கும்?