ETV Bharat / sports

செல்பி எடுத்தது குத்தமா? தென் கொரிய வீரர்களுடன் போட்டோ எடுத்த வடகொரிய வீரர்களுக்கு தண்டனை? - North Korea Players Punished

தென் கொரிய வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட காரணத்திற்காக வடகொரிய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு அந்நாட்டு அரசு தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Table Tennis medalists taking selfie in Paris Olympics (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 26, 2024, 1:46 PM IST

ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு பிரிவு விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற வடகொரிய வீரர்கள் Ri Jong Sik மற்றும் Kim Kum Yong ஆகியோர் எதிரணியைச் சேர்ந்த தென் கொரியாவின் Jong-hoon மற்றும் Shin Yu-bin ஆகியோருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் எதிரி நாட்டு வீரர்களுடன் நட்புறவு பாராட்டி செல்பி எடுத்துக் கொண்ட வடகொரிய வீரர்கள் மீது அந்நாட்டு அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்பி புகைப்படத்தில் வடகொரிய வீரர்கள் சிரித்தபடி இருக்கின்றனர்.

இந்நிலையில், தென் கொரிய வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட வீரர்களுடன் சேர்த்து பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து நாடு திரும்பிய அனைத்து வீரர் வீராங்கனைகள் மீது சித்தாந்த ரீதியிலான மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் வீரர்கள் அந்நாட்டு கலாசாரங்களுக்கு ஒன்றிய படி இருக்காததை உறுதி செய்யும் வகையிலும், மற்ற நாடுகளின் கலாசார கலிப்பினத்தை களையும் பொருட்டும் இந்த சித்தாந்த மதிப்பீடு நடைபெறுவதாகவும் இது அந்நாட்டின் நிலையான செயல்முறை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட வட கொரியா 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 68வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. தென் கொரியா - வடகொரியா இடையே நீண்ட நாட்களாக முட்டல் மோதல் போக்கு நிலவுகிறது.

ஏறத்தாழ இரு நாடுகளும் போர் சூழலில் தான் நீண்ட நாட்கள் இருக்கின்றன. அடிக்கடி கொரிய தீபகற்பத்தில் ராக்கெட் ஏவி ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை வடகொரியா மிரட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் ஒலிம்பிக்கி விளையாட்டு தொடர் கடந்த வாரம் கோலாகலமாக நிறைவு பெற்றது. அமெரிக்கா 40 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 125வது இடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து சீனா 91 பதக்கங்களுடன் 2வது இடத்தை பிடித்தது. இந்தியா 1 வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களுடன் 71வது இடத்தை பிடித்தது.

இதையும் படிங்க: இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட சீனியர் வீரர்கள்! வாய்ப்பு கிடைக்குமா? ஓய்வு தான் வழியா? - Cricketers announce retirement soon

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.