ETV Bharat / sports

MI vs RCB: டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு! - IPL 2024 Match Highlights - IPL 2024 MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான அட்டத்தில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 7:09 PM IST

மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் த்டொஅர் நாடு முழுவது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை எதிர்கொண்டு வந்த மும்பை அணி, கடந்த 7ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.

கடந்த ஆட்டத்தில் குடலிறக்க பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்தார். இருப்பினும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் அடித்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் காட்டிய அதே உத்வேகத்துடன் மீண்டும் விளையாடினால் மும்பை அணிக்கு வெற்றி நிச்சயம். அதேநேரம் பெங்களூரு அணியும் கடும் சவால் அளிக்கக் கூடிய அணி தான். இருப்பினும், இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 1 வெற்றி மற்றும் 4 தோல்விகள் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

தொடரில் நீடிக்க அடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

மும்பை இந்தியன்ஸ் : ரோகித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் : விராட் கோலி, பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

இதையும் படிங்க : ஐஎஸ்எல் கால்பந்து லீக்: பிளே ஆப், இறுதி போட்டிக்கான அட்டவணை வெளியீடு! - ISL Football Schedule

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.