லக்னோ : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.7) இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்டஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார். விளையாடிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றியும் ஒரு தோல்வியுடன் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் நான்கு ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
அடுத்த சுற்று வாய்ப்புக்கான வரிசையில் தொடர இந்த ஆட்டத்தில் இருந்து வெற்றி வாகை சூட வேண்டிய கட்டாயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்.
குஜராத் டைட்டன்ஸ் : சுப்மன் கில் (கேப்டன்), ஷரத் பி.ஆர் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோஹித் சர்மா.
இதையும் படிங்க : IPL 2024: டெல்லி அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவிப்பு - ரோகித் சர்மா புது சாதனை! - Rohit Sharma 1000 Runs