ETV Bharat / sports

டாஸ் வென்று லக்னோ பந்துவீச்சு தேர்வு! டெல்லியின் பிளே ஆப் கனவு நிறைவேறுமா? - IPL 2024 GT VS DC Match Highlights

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Etv Bharat
KL Rahul (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 7:07 PM IST

Updated : May 14, 2024, 7:16 PM IST

டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.14) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

லக்னோ அணி இதுவரை விளையாடி 12 போட்டிகளில், 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அந்த அணி அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுமுனையில் டெல்லி அணி 13 போட்டிகளில் விளையாடி அதில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

பிளே ஆப் ரேஸில் நீடிக்க இன்றைய போட்டியில் அந்த அணி இமாலய வெற்றி பெற வேண்டும். அதோடு, மற்ற போட்டிகளின் முடிவுகளுக்கும் டெல்லி அணி காத்திருக்க வேண்டி உள்ளதால் இன்றைய போட்டி சற்று கடினமானதாகவே இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. எறத்தாழ இன்றைய போட்டி லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு வாழ்வா, சாவா என்பது போன்றது தான்.

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது டெல்லி அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய ஒன்று. கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரிஷப் பன்ட் இன்றைய ஆட்டத்தில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

டெல்லி கேபிட்டல்ஸ்: அபிஷேக் போரல், ஜேக் ப்ரேசர் மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்பாடின் நைப், ரசிக் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்) குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்.

இதையும் படிங்க: ஐபிஎல் குவாலிஃபயர், இறுதிப் போட்டிக்கான டிக்கெட் புக்கிங் எப்போது? - Ipl Qualifier Match Tickets

Last Updated : May 14, 2024, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.