லக்னோ: ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இடையே லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல், டி காக் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
அர்ஷ்தீப் பந்தில் பவுண்டரி, சிக்ஸ் அடித்த ராகுல் 15 ரன்களில், அவர் பந்திலேயே அவுட்டானார். இதனையடுத்து வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த படிக்கல், 9 ரன்களுக்கு சாம் கரண் பந்தில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டொய்னிஸ் ராகுல் சகார் பந்தில், அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்து 19 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர், களமிறங்கிய பூரான் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினார். மறுபக்கம் டிகாக் தன்பங்கிற்கு அரை சதம் கடந்தார். டிகாக் 54 ரன்கள் எடுத்த நிலையில், அர்ஷ்தீப் பந்தில் அவுட்டானார். பவுண்டரி, சிக்சர்களாக விளாசி வந்த பூரான் 42 ரன்களுக்கு ரபாடா பந்தில் போல்டானார்.
பின்னர் களமிறங்கிய க்ருணால் பாண்டியா (43) மட்டும் ஓரளவு ரன்கள் சேர்க்க பதோனி, பிஷ்னாய் உடனே தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 20 ஓவரில் லக்னோ அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: RCB Vs KKR:500வது போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற நரேன்..ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றி! - KKR Beat RCB