கொல்கத்தா: 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தா ஈடர் கார்டன் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததது.
அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக சுனில் நரைன் - பில் சால்ட் ஆகியேர் களமிங்கினார். இதில் சுனில் நரைன் 2 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறியதை அடுத்து, களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள் எடுத்திருந்த போது டி.நடராஜன் வீசிய பந்தில் மார்கோ ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து கேகேஆர் கேப்டன் ஸ்ரேயஸ ஐயர் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த நிதிஷ் ரானா 9 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் கேகேஆர் அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் கைகோர்த்த பில் சால்ட்- ரமன்தீப் சிங் ஜோடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இதில் ரமன்தீப் சிங் 35 ரன்களுக்கும், பொறுப்புடன் விளையாடிய பில் சால்ட் 54 ரன்களுகும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக 13.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள இழப்பிற்கு 119 ரன்களுக்கு சேர்த்தது கேகேஆர் அணி.
சிக்ஸர் மழை: ஈடர் கார்டன் மைதானாம் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும் என எதிர்பார்த்தநிலையில் கொல்கத்தா அணியின் ஸ்கோரை பார்த்து கேகேஆர் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்தநிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டகாரர்ளான ரிங்கு சிங் மற்றும் ஆன்ட்ரே ரசல் ஜோடி சேர்த்து அணியின் ஸ்கோரை அதிராயாக உயர்த்தினார்.
15 ஓவர்களில் முடிவில் 123 ரன்கள் சேர்த்து இருந்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அதாவது கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி 85 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரே ரசல் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசி கடைசிவரை களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக டி.நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
-
An innings that made us believe. Proud 🧡#PlayWithFire #KKRvSRH pic.twitter.com/7IJxeLeZzm
— SunRisers Hyderabad (@SunRisers) March 23, 2024
இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால்-அபிஷேக் ஷர்மா ஜோடி இருவரும் 32 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அடுத்தடுத்த அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 20, எய்டன் மார்க்ரம் 18 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
கிளாசிக் கேம்: இதனை அடுத்த வந்த ஹென்ரிச் கிளாசென் கொல்கத்தா பவுலர்களை வெளுத்து வாங்கினார். இது சுவாராஸ்யாமன விஷயம் என்னவென்றால் ஹென்ரிச் கிளாசென் எதிர்கொண்ட 29 பந்துகளில் 63 ரன்களில் விளாசினார். இதில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை, ஆனால் மொத்தம் 8 சிக்ஸர்கள் விளாசி கொல்கத்தா பவுலர்களை சிதறடித்தார். இதனால் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
20 ஓவரை ஹர்ஷித் ராணா வீச, முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார் கிளாசென். இதனால் 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஓவரின் 3-வது பந்தில் ஷபாஸ் அகமதுவையும், 5வது பந்தில் கிளாசனையும் வீழ்த்தினார் ஹர்ஷித் ராணா. இதன் காரணமாக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் கடைசி பந்தை டாட் பந்தாக வீசினார் ஹர்ஷித், இதனால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சாம் கரண், லிவிங்ஸ்டன் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி! - PBKS Vs DC