ETV Bharat / sports

குத்துச்சண்டை வீராங்கனை 'இமானே கெலிஃப்பை' ஆதரித்து கனிமொழி எம்பி இன்ஸ்டா பதிவு! - paris olympic 2024 - PARIS OLYMPIC 2024

Kanimozhi: தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப்பை ஆதரித்துள்ளார்.

IMANE KHELIF
IMANE KHELIF (Credits - AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 10:57 PM IST

சென்னை: தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கும். எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும் இப்போது இமானே கெலிஃப் ஆகிய உங்களுக்கும் அப்படிதான். உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

யார் இந்த சாந்தி? : தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவர் தமிழ்நாட்டிற்காக 50 பதக்கங்களும், இந்தியாவிற்காக 12 சர்வதேச பதக்கங்களும் தடகளத்தில் வென்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலின சரிபார்ப்பு சோதனையில் அவர் தோல்வியடைந்ததால் தடகள போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அவர் இதற்கு முன்னதாக வென்ற பதக்கங்களும் பறிக்கப்பட்டன.

இமானே கெலிஃப் விவகாரம் : கடந்த ஆக 1ஆம் தேதி நடைபெற்ற பாரீஸ் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப், 46 வினாடிகளில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியை வெளியேற்றினார்.

இந்நிலையில், வெளியே வந்த கரினி நான் கெலிஃப்க்கு எதிராக போட்டியிட விரும்பவில்லை என்றும், கெலிஃப் வளையத்துக்குள் மிருகத்தனமாக சண்டையிடுகிறார் என்றும், கெலிஃப் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் தகுதி தனக்கு இல்லை என்றும் கூறினார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், பெண்கள் குத்துச்சண்டையில் போட்டியிட ஒரு "டிரான்ஸ்" குத்துச்சண்டை வீரரை அனுமதித்ததற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை (IOC) விமர்சித்து எலான் மஸ்க் மற்றும் ஜே.கே.ரவுலிங் போன்ற பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

பின்னர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அதிகாரப்பூர்வ வெளியீட்டில், டோக்கியோவில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தியது. தற்போது இவர் அரை இறுதியில் விளையாட இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "நீரஜ் சோப்ராவுடன் பேசுவதில்லை"- அவரது தாத்தா போடும் புதிர் என்ன? - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.