ETV Bharat / sports

12 ஆண்டுகளுக்கு பிறகு கேன் வில்லியம்சனுக்கு நடந்த சோகம்.. வைரலாகும் ரன் அவுட் வீடியோ! - Mitchell Starc

Kane Williamson: 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆகியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kane Williamson Run Out
Kane Williamson Run Out
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:19 PM IST

வெலிங்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 டி20 போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். இதில் ஏற்கனவே 3 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, அதன் முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில், அதிகபட்சமாக கேமரூன் கிரின் 174 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. ஆனால், அந்த அணியால் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான டாம் லதம் 5 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். இந்த நிலையில்தான் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். வெலிங்டன் மைதானம், கேன் வில்லியம்சனின் கோட்டை என்பதால், அவர் மீது அதித எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், மிட்செல் ஸ்டார்க் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன், அந்த பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்துவிட்டு சிங்கள் எடுக்க முயன்றார். அப்போது பந்தையே பார்த்துக் கொண்டிருந்த வில் யங், கடைசி நேரத்தில் ஓட முயற்சித்தார். ஆனால், அவர் எதிர்பாராத விதமாக கேன் வில்லியம்சன் மீது மோத, அதை பயன்படுத்திக் கொண்டு பந்தை கைப்பற்றிய லபுசன் டரைட் ஹிட் அடித்தார்.

இதனால் எவ்வித ரன்களும் எடுக்காமல், கேன் வில்லியம்சன் 0 (2) டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் கேன் வில்லியம்சன் 12 வருடம் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆகியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, 2012இல் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லப்பர் பந்து படத்திற்கும் திருச்சிக்கும் கனெக்‌ஷன்.. ஹரிஷ் கல்யாண் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.