ETV Bharat / sports

ஆஸ்திரேலியாவுடன் தோல்வியால் கானல் நீரானதா அரை இறுதி வாய்ப்பு! கணிப்புகள் கூறுவது என்ன? Chance to get semi final for indian women! - T20 WOMEN WORLD CUP 2024

மகளிர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு பலிக்குமா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Representative image (Getty Images)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 14, 2024, 9:40 AM IST

ஐதராபாத்: 10 அணிகள் இடையிலான 9வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று (அக்.13) இரவு சார்ஜாவில் ஏ பிரிவில் நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தன. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (54 ரன்) அரைசதம் விளாசிய போதும் கடைசியில் பயனில்லாமல் போனது.

இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிரிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு சற்று மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது. இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் அதில் தலா 2 வெற்றி, மற்றும் தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் உள்ளது.

அதேநேரம் இதே ஏ பிரிவில் துபாயில் இன்று (அக்.14) இரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2வது அணியாக, நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.

அதேநேரம் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி செல்ல வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் பாகிஸ்தான் அணியை விட இந்தியா ரன் ரேட்டில் முன்னிலை வகிக்கிறது.

தற்போது இந்திய மகளிர் அணியின் தலைவிதி பாகிஸ்தான் கையில் உள்ளது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 ஆட்டங்களில் தோல்வியை மட்டுமே பாகிஸ்தான் அணி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோற்றது இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.