சென்னை: நடப்பு ஐபிஎல் தொடர், கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெறும் 39வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறவுள்ளது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 3 தோல்வி என 8 புள்ளிகளுடன், புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சம பலத்துடன் உள்ள சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா இன்னும் தன்னுடைய முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், 14 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கிய டேரல் மிட்செல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இருப்பினும் சிவம் துபே, கேப்டன் ருதுராஜ், ஜடேஜா, ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் விளையாடி வருகின்றனர்.
பந்து வீச்சை பொறுத்த வரையில் முஸ்தபிசுர், பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் நன்றாக பந்து வீசினாலும் பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமாகும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை பொறுத்தவரையில் 4 வெற்றி 3 தோல்வி என புள்ளிபட்டியலில் என்று 8 புள்ளிகளுடன் 5 இடத்தில் உள்ளது.
சிஎஸ்கேவிற்கு - லக்னோவிற்கு ரன் ரோட் மட்டுமே வித்தியாசம் என்பதால் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கும் கேப்டன் கே.எல்.ராகுல்- டி காக் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர்.
அதன் பிறகு களமிறங்க கூடிய , மார்கஸ் ஸ்டாயினிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய வகையில் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால் குருணல் பாண்டியா, ரவி பிஸ்னாய் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள் எனத் தெரியவருகிறது.
அதேபோல், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடமல் இருந்த இளம் வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இந்த போட்டியில் விளையாட வாய்புள்ளதாக தெரிகிறது, இது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
இதற்கு முன்னதாக ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு சோப்பாகத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் சிஎஸ்கே என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் அபார சதத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை ஊதித் தள்ளிய ராஜஸ்தான்!