ETV Bharat / sports

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா போராடித் தோல்வி! - ASIAN CUP BASKETBALL QUALIFIERS

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று போட்டியில் கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

Etv Bharat
Asia Cup Basket Ball Qualifiers (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 23, 2024, 5:46 PM IST

சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடரின் தகுதிச் சுற்று போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சர்வதேச அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் இரண்டு போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் முதல் போட்டி இன்று (நவ.23) நடைபெற்றது.

இதில் உலக தரவரிசையில் 76வது இடத்தில் உள்ள இந்திய அணி, 101வது இடத்தில் உள்ள கத்தார் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக சமீபத்தில் உயிரிழந்த ஆசிய கூடைப்பந்து சங்கத்தின் செயலாளர் சோ ஹோக்கிற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இந்திய அணியின் கேப்டனும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான ஹபீஷ் அடுத்தடுத்து 3 கவுண்ட் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். ஹபீஷ் எடுக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

இருப்பினும் கத்தார் வீரர்கள் 2 கவுண்ட் அதிகம் எடுத்ததால் முதல் கால் பாதியில் அந்த அணி 17-க்கு 14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது கால் பாதியிலும் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர். இரண்டாவது கால் பாதியிலும் கேப்டன் ஹபீஸ் மூன்று கவுண்ட் எடுத்து அணியின் புள்ளிக் கணக்கை உயர்த்தினார்.

கத்தார் அணியில் லிவிஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவிலும் கத்தார் அணி 36-க்கு 31 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து அடுத்த பாதியிலும் கத்தார் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கேப்டன் ஹபீஷை எதிரணி வீரர்கள் ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் அற்புதமாக தடுத்தனர். அதே வேளையில் புள்ளிகளையும் குவிக்க தவறவில்லை.

இந்திய அணியில் மற்றொரு தமிழ்நாட்டு வீரரான பிரின்ஸ் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்த போதிலும் அது இந்திய அணியின் வெற்றிக்குரியதாக அமையவில்லை. கத்தார் அணியில் லிவிஸ் மற்றும் ஹேரிஸ் ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தனர். லிவிஸ் 19 புள்ளிகளையும், ஹேரிஸ் 17 புள்ளிகளையும் கைப்பற்றி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணியில் கேப்டன் ஹபீஸ் அதிகபட்சமாக 17 புள்ளிகளையும், பிரின்ஸ் 13 புள்ளிகளையும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் ரீபவுண்ட் எடுப்பத்தில் கோட்டை விட்டதால் நம்மால் அதிக புள்ளிகளை குவிக்க முடியவில்லை. இறுதியில் 69-க்கு 53 என்ற புள்ளிகள் கணக்கில் கத்தார் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2025 ஐபிஎல் மெகா ஏலம்: எப்படி இலவசமாக பார்ப்பது? முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.