ETV Bharat / sports

தனிப்பட்ட வாழ்க்கையால் சரிந்த ஷிகர் தவான்? - பயிற்சியாளர் சிறப்பு பேட்டி! - Shikhar Dhawan - SHIKHAR DHAWAN

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ஷிகர் தவான் சிறுவயது பயிற்சியாளர் மதன் சர்மா ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Etv Bharat
Shikhar Dawan Coach Exclusive Interview (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 6:08 PM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவான் தனது ஓய்வு குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது குழந்தை பருவ பயிற்சியாளரும் வழிகாட்டியுமான மதன் ஷர்மாவைக் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான நாள்:

இந்நிலையில், ஷிகர் தவானின் சிறுவயது பயிற்சியாளர் மதன் சர்மா ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ​​ஷிகர் தவான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் அவரது பயணம் மிக நீண்டது, ஒவ்வொரு நாளும் அவரது பயணத்தை நான் பார்த்திருக்கிறேன்.

சிறிய வீரர்கள் முதல் பெரிய வீரர்கள் வரை அவர்களுடன் தவான் விளையாடியதை பார்த்திருக்கிறேன். அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியான விஷயம், ஆனால் அவர் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை நாட்டுக்காக விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

ஷிகர் மிகவும் கடின உழைப்பாளி:

தொடர்ந்து பேசிய அவர், ஷிகர் தவான் சிறுவயதில் இருந்தே விளையாடி வருகிறார். 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான அணியில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஒரு போட்டியில் விளையாடிய பிறகு நீக்கப்பட்டார். பின்னர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு, அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோர் அணியில் கலந்து கொண்ட ஷிகர் தவான் சிறப்பாக விளையாடினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் இறுதியாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை அணியில் இடம் பிடித்தார். எப்படிப்பட்ட பந்து வீச்சாளர்களை சந்திக்க வேண்டும், எந்த உயரத்தில் பந்து வரும், எந்த மாதிரியான வானிலையில் எப்படி விளையாட வேண்டும், பந்து எவ்வளவு ஸ்விங் செய்யும் என்பது அறிந்து அதற்கு ஏற்ற வகையில் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

ஆப் சைட் ஆட்டத்தின் அரண்:

ஷிகர் தவான் ஆப் சைடு பேட்டிங்கில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்தியாவுக்காக தொடக்க வீரராக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா விளையாடும் போது, ​​ரோகித்துக்கு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் தேவைப்படும் என்பதால், அந்த சூழ்நிலையில் ஆட்டத்தை தன் வசம் எடுத்துக் கொண்டு ஷிகர் தவான் அடித்து விளையாடத் துவங்குவார்.

இதனால் சில நேரங்களில் விரைவாக அவுட்டாக நேரிடும். இதுவே தவானின் மைனஸ் பாயிண்ட். விரேந்தர் சேவக் மற்றும் கவுதம் கம்பீருக்கு பின்னர் இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர் ஷிகர் தவான். முந்தைய கால கிரிக்கெட்டுக்கும் தற்போதைய கிரிக்கெட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

தனிப்பட வாழ்க்கையில் ஷிகர் தவான்:

முன்பு நாங்கள் பாரம்பரிய கிரிக்கெட் விளையாடினோம். இப்போது கொஞ்சம் வேகமான கிரிக்கெட் விளையாடுகிறோம். அதையே தான் சேவாக்கும் கடைபிடித்து வந்தார். ஒரு தொடக்க ஆட்டக்காரராக, அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து, எதிரணியின் மன உறுதியை உடைப்பது தான் ஒப்பனரின் பணி. என்னைப் பொறுத்தவரை சேவாக், கம்பீர், தவான் ஆகியோர் இந்திய அணியின் நல்ல தொடக்க ஆட்டக்காரர்கள்.

தவானின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஏனென்றால் அவர் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையால் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். நாட்டுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்பினார்.

எப்பவும் ஒரே மாதிரி இருக்கிறார்:

முதல் நாள் வலை பயிற்சியில் ஷிகர் தவானை பார்த்த போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருக்கிறார். எனக்கு ஒரே மாதிரியாக ஷிகர் தவான் தெரிகிறார். இன்று காலை என்னிடம் பேசிய போது ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளேன் என்று என்னிடம் தெரிவித்தார். நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் தொடர்ந்து எதாவது ஒரு பணியின் மூலம் தொடர்ந்து பணியாற்றுவார் என்று நம்புகிறேன்" என்று மதன் சர்மா கூறினார்.

இதையும் படிங்க: ஷிகர் தவானின் எளிதில் முறியடிக்க முடியாத 5 சாதனைகள்! - Shikhar Dhawan Records

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.