சென்னை: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. நேற்று தொடக்க விழா நடைபெற்ற நிலையில், இன்று (செப்.11) முதல் வரும் 22ஆம் தேதி வரை 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. ஓபன் சுற்றில் ஆடவர் பிரிவில் 197 அணிகளும், மகளிர் பிரிவில் 183 அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியிலும் ஒரு மாற்று வீரர் உள்பட 5 வீரர்கள் இடம் பிடித்திருப்பர். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு ஒரு புள்ளியும், டிரா செய்பவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். இந்தியாவில் இருந்து கடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் களமிறங்கிய அதே அணி தான் தற்போதும் விளையாடுகிறது.
The 45th FIDE Chess Olympiad kicks off tomorrow in Budapest, Hungary 🇭🇺 With a record-breaking 197 teams in the Open section and 184 in the Women’s competition, this is set to be one of the biggest and most thrilling events in chess history.
— International Chess Federation (@FIDE_chess) September 10, 2024
Here’s a sneak peek 👀 of the venue… pic.twitter.com/pOwuCriCca
ஓபன் சுற்றின் ஆடவர் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகேசி, குகேஷ், விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ஹரிகா துரோணோவள்ளி, வந்திகா அகர்வால், தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் உள்ளனர்.
சுவிஸ் முறையில் நடைபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு சுற்றுக்கும் மொத்தம் 90 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 40 நகர்த்தல்களுக்குள் போட்டி முடியவில்லை என்றால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற 2022 செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று இருந்தது.
#ChessOlympiad♟️
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) September 10, 2024
" the stage is set for a thrilling showdown!
🇮🇳 open team is 2nd seeded, & the women's team leads the charge as the top seed.both teams are looking forward to better their medal color at #BudapestOlympiad (2022 Olympiad: ♂️🥉♀️🥉).
1st Round:📅11th SEP⏰6:30 PM pic.twitter.com/PC90sZxvQG
மேலும் அர்மேனியா நாட்டு அணி வெள்ளியும், இந்திய அணி வெண்கலமும் வென்று இருந்தது. அதேபோல், மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து ஜார்ஜியா நாட்டு அணி வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றிருந்தது. இந்த முறை இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கி உள்ளது.
இதையும் படிங்க: Southern Railway Recuritment 2024: தெற்கு ரயில்வேயில் வேலை.. 10ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்! - Southern Railway sports quota job