பாரிஸ்: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
இதில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 16 பிரிவுகளில் 117 இந்திய வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 18 வீரர்கள், 11 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 29 பேர் பங்கேற்க உள்ளனர். இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.
🚨 Archery - Women’s Team finishes 4th in the Ranking Round. They advance to the Quarterfinals and will compete against the winner of France and Netherlands. 👏🏽👏🏽#JeetKiAur | #Cheer4Bharat
— Team India (@WeAreTeamIndia) July 25, 2024
இந்நிலையில், இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று இன்று நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற தனிநபர் ரேங்க் சுற்றில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் ரேங்கிங் வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளுடன் 11வது இடம் பிடித்தார். இவர் 9 முறை துல்லியமாக குறிபார்த்து அம்பினை எய்திருக்கிறார்.
பஜன் கவுர் 659 புள்ளிகளுடன் 22வது இடமும், தீபிகா குமாரி 658 புள்ளிகளுடன் 23வது இடமும் பிடித்தார். இவர்கள் இருவரும் 6 முறை சரியாக குறிபார்த்து இலக்கை நோக்கி அம்பினை எய்துள்ளனர். 12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி சுற்றின் முடிவில் 1983 புள்ளிகளை பெற்று நான்காம் இடம் பிடித்தது.
இந்த ரேங்கிங் சுற்றில் தென் கொரியா 2046 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மகளிர் தனிநபர் பிரிவில் தென் கொரியாவைச் சேர்ந்த லிம் சி-ஹியோன் 694 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்; நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ரா..தடகளத்தில் அசத்த காத்திருக்கும் இந்திய வீரர்கள்!