சென்னை: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுளையும் இழந்தது.
இதனால் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
A game-changing TON 💯 & 6⃣ Wickets! 👌 👌
— BCCI (@BCCI) September 22, 2024
For his brilliant all-round show on his home ground, R Ashwin bags the Player of the Match award 👏 👏
Scorecard ▶️ https://t.co/jV4wK7BOKA #TeamIndia | #INDvBAN | @ashwinravi99 | @IDFCFIRSTBank pic.twitter.com/Nj2yeCzkm8
இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அஸ்வினின் சதம் மற்றும் ஜடேஜாவின் அசத்தலான பேட்டிங் ஆகியவற்றால் 376 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணியின் இளம் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அபாரமாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து, 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதத்தால் விறுவிறுவென ரன்களைக் குவித்தது.
6⃣ wickets in the morning session on Day 4 🙌
— BCCI (@BCCI) September 22, 2024
Bangladesh 234 all out in the 2nd innings.
A dominating win for #TeamIndia! 💪
Scorecard ▶️ https://t.co/jV4wK7BOKA#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/TR1RoEDyPB
அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்னாக இருந்த போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸையும் சேர்த்து 514 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுளையும் இழந்தது.
கடைசி வரை போராடிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 82 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் சதம் விளாசியது மட்டுமல்லாமல், 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயனகக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் 2024; வரலாற்று வெற்றியை நோக்கி இந்தியா.. அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல்!