பெங்களூரு: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அக்.16ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதல் நாள் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது நாள் போட்டி தொடங்கியது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளும், வில்லியம்4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா 131 ரன், கான்வே 91 மற்றும் டிம் சவுதி 65 ரன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 402 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி. இதில் ஜெஸ்வால் 35ரன், கேப்டன் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70ர்னகளுக்கு விக்கெட் இழந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி; நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்!
#KarnatakaRains #BengaluruRains #BangaloreRains #Bangalore #INDvNZ #INDvsNZ #BengaluruWeather #BangaloreWeather #BengaluruRain #BangaloreRain
— Karnataka Weather (@Bnglrweatherman) October 19, 2024
Today's forecast: Moderate to heavy rains/thunderstorms likely over Bengaluru city
Rains likely to affect Test match at Chinnaswamy… https://t.co/62I7SqWJxt
இதன் பின்னர் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை மீட்டனர். இதில் அபாரமாக விளையாடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் விளாசிய நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார். இதன் பின்னர் 99 ரன்கள் எடுத்து இருந்த ரிஷப் பண்ட் 1 ரன்னில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இந்திய அணி 433/4 என்ற நல்ல நிலையில் இருந்தது.
நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு: ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கே.எல்.ராகுல் 12 (16), ரவீந்திர ஜடேஜா 5 (15), ரவிச்சந்திரன் அஸ்வின் 15 (24) அடுத்தடுத்த ஆட்டமிழந்ததால் இந்திய அணி 462/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி, நியூசிலாந்துக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளனர்.
மழை பெய்ய வாய்ப்பு: நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை நாளை மழை பெய்தால் போட்டி டிராவில் முடியும். இப்போட்டியில் தோல்வியிலிருந்து இந்தியாவை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். அது நடக்குமா? இல்லையா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.