ராஜ்கோட்: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
-
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) February 15, 2024
Captain @ImRo45 wins the toss and #TeamIndia have opted to bat in Rajkot 🙌
Follow the match ▶️ https://t.co/FM0hVG5X8M#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/P6iiLyHjvR
பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 1 - 1 என்ற கணக்கில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று (பிப்.15) ராஜ்கோட்டில் உள்ள சவுராஸ்டிரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா முன்னிலை பெறுமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.
இந்திய அணி: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் கிராலி
இதையும் படிங்க: RSA VS NZ: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து பின்னடைவு..!