ஹராரே: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் முறையே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.14) மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Innings Break!#TeamIndia posted 167/6 on the board!
— BCCI (@BCCI) July 14, 2024
5⃣8⃣ for vice-captain @IamSanjuSamson
Some handy contributions from @IamShivamDube & @ParagRiyan
Over to our bowlers now! 👍 👍
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#ZIMvIND pic.twitter.com/p5OEEx8z2a
இந்திய அணியின் இன்னிங்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். கடந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இருவரும் இந்த ஆட்டத்தில் சோபிக்க தவறினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் கேப்டன் சிக்கந்தர் ராஸாவின் பந்த்வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முசர்பனி பந்தில் 14 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லும் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணியில் சற்று பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதனிடையே கைகோர்த்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் நிதானமாக விளையாடி அணியின் ரன்வேகத்தை உயர்த்தினர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் ரியான் பராக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. அபாரமாக விளையாடி அரை சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. ரிங்கு சிங் 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாப்வே அணியில் முசார்பனி 2 விக்கெட்டும், பிரண்டன் மவுதா, நகர்வாம், கேப்டன் சிக்கந்தர் ராஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணி 168 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: டாஸ் வென்று ஜிம்பாப்வே பந்துவீச்சு தேர்வு! வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யுமா இந்தியா? - Ind vs Zim 5th T20 Live