துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றியது.
டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 3 மற்றும் நான்காவது இடங்களில் முறையே இங்கிலாந்து (105 புள்ளிகள்) மற்றும் தென் ஆப்பிரிக்கா (103 புள்ளிகள்) அணிகள் உள்ளன.
ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா 122 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேபோல் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 3 மற்றும் 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா (112 புள்ளிகள்) மற்றும் பாகிஸ்தான் (106 புள்ளிகள்) அணிகள் உள்ளன.
டி20 கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்தியா 264 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய அணி ஒரு இடம் உயர்ந்து 257 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. 2வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி 252 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சரிந்தது.
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணி 2 இடங்கள் உயர்ந்து 250 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், நியூசிலாந்து அணி ஒரு இடம் சரிவு கண்டு 250 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: திக்..திக் நிமிடங்கள்..ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி! ஐபிஎல் தொடரில் 6வது முறையாக வெற்றி - IPL 2024 RR Vs SRH