ETV Bharat / sports

எம்.எஸ்.தோனி அவதூறு வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

ms-dhoni-defamation-case
எம்.எஸ்.தோனி அவதூறு வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 8:13 PM IST

Updated : Jan 30, 2024, 9:15 AM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு எதிராக மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி சௌமியா தாஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் அத்தாரிட்டி நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை அணுகியதாகவும், உரிமைக் கட்டணத்தைச் செலுத்தி, லாபத்தில் 70க்கு 30 சதவீதம் பங்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனை மற்றும் விதிமுறைகளை ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், இது குறித்து தோனி தரப்பில் இருந்து பலமுறை நினைவூட்டியும் ஆர்கா நிறுவனம் கண்டுகொள்ளாததால், ஆக்ரா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகார கடிதத்தை தோனி திரும்பப் பெற்றார்.

இருப்பினும், ஆர்கா ஸ்போர்ட்ஸ் தொடர்ந்து தோனி பெயரைப் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு எவ்வித பணத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், ஆர்கா ஸ்போர்ட்ஸ் எவ்வித பதிலும் தெரிவிக்காததால், அவர்களால் தனக்கு ரூ.15 கோடி நஷ்டம் அடைந்ததாகக் கூறி, தோனி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத மூன்றாம் தரப்பிடம் இருந்து வந்த மின்னஞ்சலில் ஒப்பந்தம் ரத்து செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் ரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ கடிதம் தனக்கு வரவில்லை என்று திவாகர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. பதிலுக்கு தோனி தரப்பில் ஆர்கா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்கா நிறுவனத்தால் தோனி நஷ்ட்டமடைந்ததாக ஜார்கண்ட் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஆர்கா நிறுவனம் பதில் அளித்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்னதாக தோனியின் வழக்கறிஞர் ஆர்கா நிறுவனம் மீது குற்றம்சாட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஆர்கா நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது. மேலும், தோனி மட்டும் அல்லாது பல செய்தி நிறுவனங்கள் மீதும் மான நஷ்ட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: 7 நாட்களில் நாடு முழுவதும் சிஏஏ அமல் : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! சாத்தியமாகுமா?

Last Updated : Jan 30, 2024, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.