ஐதராபாத்: உலக பிக்கில் பால் அமைப்பு மற்றும் ஆல் இந்தியா பிக்கில் பால் அசோசியேஷன் நடத்தும் பிக்கில் பால் விளையாட்டு தொடரில் சென்னை அணியின் உரிமையாளராக நடிகை சமந்தா உள்ளார். உலகளவில் தற்போது பிக்கில் பால் விளையாட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் பிக்பால் பால் விளையாட்டு அதிகம் பேரால் விளையாடக் கூடிய விளையாட்டாக மாறி வருகிறது.
டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளையும் ஒருங்கிணைந்த வகையில் இந்த பிக்கில் பால் கேம் விளையாடப்படுகிறது. டென்னிஸ் கோர்ட்டில், டேபிள் டென்னிஸ் பேட் வைத்து விளையாடும் இந்த பிக்கில் பால் விளையாட்டுக்கு என தனி விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உலக பிக்கில் பால் விளையாட்டு தொடரில் சென்னை அணி கலந்து கொள்கிறது. சென்னை அணியின் உரிமையாளரான சமந்தா, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். இதனிடையே, பிக்கில் பால் விளையாட்டை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தும் வகையில் நடிகை சமந்தா தன் நண்பர்களுடன் இணைந்து பிக்கில் பால் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Cutest Video In Internet Today 😍 ❤️ pic.twitter.com/4ucqclAvXX
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) August 27, 2024
பிங்க் நிற உடையில் மெல்லிய தேகத்துடன் காணப்படும் சமந்தா, நண்பர்களுடன் பிக்கில் பால் விளையாடுகிறார். உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததா இந்த பிக்கில் பால் விளையாட்டு என்றால், அதனால் இதயம் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை தடுக்க முடியும் என்கின்றனர் உடற்கல்வியாளர்கள்.
பிக்கில் பால் விளையாட்டின் மூலம் என்னென்ன உடல் ஆரோக்கியத்தை பெறலாம் என்று இந்த செய்தியில் காணலாம்.
கை விரல்களுக்கு நல்ல உடற்பயிற்சி: பிக்கில் பால் விளையாடுவதன் மூலம் நம்மை துருதுருவென வைத்துக் கொள்ள உதவுகிறது. அடுத்தடுத்து பந்துகளை கவனித்து உடனடியாக விளையாட வேண்டும் என்பதால் நமது உடலின் சமநிலை மற்றும் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது. இது தவிர துல்லியமான கண் பார்வை, கைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், புத்திக் கூர்மையையும் உருவாக்க உதவுகிறது. மேலும், உடல் எடை குறைவது மட்டுமின்றி பாதங்கள், கால் எலும்புகள் ஆரோக்கியமடைகின்றன.
இதயத்திற்கு என்ன பயன்?: பிக்கில் பால் விளையாட்டு ஒரு சிறந்த இருதய உடற்பயிற்சி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகிறது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்: உடலில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான எண்டோர்பின் ஹார்மோன்களை பிக்கில் பால் விளையாட்டு தூண்டுகிறது, இதன் மூலம் தொடர்ந்து பிக்கில் பால் விளையாடும் போது மனது மற்றும் உடல் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வழிவகை செய்கிறது.
பிக்கில் பால் விளையாடுவதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற குறைத்து சிறந்த மனநிலையில் இருக்க முடியும். மேலும் மனதை எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலக்கி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது பிக்கில் பால் விளையாட்டு.
ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது: பிக்கில் பால் விளையாடும் போது எப்போதும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணித்து கொண்டே இருப்பதால் உடல் எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமடைகின்றன. இந்த விளையாட்டு எலும்பு திசுக்களை பாதுகாக்கவும் மற்றும் எலும்பு இழப்பு விகிதத்தை குறைக்கவும் உதவுகிறது.
அதிகரிக்கும் சமூக தொடர்புகள்: சமூக நன்மைக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டுகள் மூலம் ஒருவர் மற்றொருவருடன் நட்பு பாராட்டும் போது உறவுகள் வலுப்படுகின்றன. விளையாட்டு ஒருவரை சக வீரர்களுடன் நட்பை உருவாக்க உதவுகிறது, சமூக ரீதியாக சுறுசுறுப்பாகவும் ஈடுபட உதவுகிறது.
இதையும் படிங்க: லக்னோ அணியின் ஆலோசகரான ஜாகீர் கான்! எல்எஸ்ஜி போடும் கணக்கு இது தான்? - Zaheer Khan on Lucknow super giants