ஹைதராபாத்: 2025ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணி வீரர்களும் இன்று தங்களது அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் (ரூ.18 கோடி), பதிரானா (ரூ.13 கோடி), சிவம் துபே (ரூ.12 கோடி) ஜடேஜா (ரூ.18 கோடி), தோனி (ரூ.4 கோடி) என தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
The wait is over and the retentions are 𝙃𝙀𝙍𝙀! 🔥
— IndianPremierLeague (@IPL) October 31, 2024
Here are all the players retained by the 🔟 teams ahead of the #TATAIPL Auction 💪
What do you make of the retention choices 🤔 pic.twitter.com/VCd0REe5Ea
மும்பை இந்தியன்ஸ்: பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், இளம் வீரர் ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், அன்-கேப்ட் வீரரான யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கேகேஆர் அணி தரப்பில் ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்கரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரைன் (ரூ.12 கோடி), ரசல் (ரூ.12 கோடி), ஹர்சத் ராணா (ரூ.4 கோடி), ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் சர்மா (14 கோடி), நிதிஷ் ரெட்டி (6 கோடி), ஹென்ரிச் கிளாசன்(23 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ.18 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துரூவ் ஜூரல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி ), சந்தீப் சர்மா ( ரூ.4 கோடி)
குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் (ரூ.18 கோடி), சுப்மன் கில் (ரூ.16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ.8.50 கோடி), ராகுல் திவாட்டியா (ரூ.4 கோடி) , ஷாரூக்கான் (ரூ.4 கோடி)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரான் (ரூ.21 கோடி), ரவி பிஸ்னாய் (ரூ.11 கோடி), மாயங் யாதவ் (ரூ.11 கோடி), மோஷின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி ( ரூ.4 கோடி)
டெல்லி கேபிட்டல்ஸ்: அக்சர் பட்டேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரெல் (ரூ.4 கோடி)
பஞ்சாப் கிங்ஸ்: ஷாசாங் சிங் (5.5 கோடி), பிராப்சிம்ரன் சிங் (4 கோடி ரூபாய்)