ஹைதராபாத்: உலக அளவில் அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டு கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிபா உலகக் போப்பை கால்பந்து தொடர் உலக புகழ் பெற்றவை. அந்த வகையில், 2026ஆம் ஆண்டிற்கான பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்த அறிவிப்பை பிபா அமைப்பு வெளியிட்டு ரசிகர்களை பெரும் மகிழ்வடையச் செய்துள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டிற்கான பிபா கால்பந்து தொடரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதல் போட்டி மெக்சிகோ நகரில் புகழ் பெற்ற எஸ்டேடியோ அஸ்டெகா (Estadio Azteca) மைதானத்தில், 2026ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி துவங்க உள்ளது.
அதேபோல், 2026 பிபாவின் இறுதிப் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் (New Jersy) 2026ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் டொராண்டோ (Toronto), மெக்சிகோ (Mexico) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) ஆகிய இடங்களில், 2026 பிபாவின் ஆரம்ப லீக் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
மேலும், இந்த போட்டிகளை நடத்தும் நாடுகளான மெக்சிகோ, கனடா, அமெரிக்காவின் கால்பந்து அணிகள் வெவ்வேறு குழுவில் விளையாட உள்ளனர். மேலும், 2026 பிபாவின் முதல் போட்டி மெக்சிகோ துவங்கி வைக்க, ஜூன் 12ஆம் தேதி கனடா மற்றும் அமெரிக்கா வெவ்வேறு இடங்களில் தங்களின் ஆட்டத்தை விளையாட உள்ளனர்.
இது குறித்து ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) கூறுகையில், "அதீத உணர்வுப்பூர்வமான ஃபிஃபா கால்பந்து போட்டிகள் மீத கனவு நினைவாகும் படி, கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்டமான 16 மைதானங்களில், 104 போட்டிகள் நடக்க உள்ளன. மேலும், இந்த போட்டிகளை நடத்தும் மூன்று நாடுகளுக்கு எனது நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், 2026 ஃபிஃபா போட்டிகளில் மோதும் அணிகள் மற்றும் நேரங்கள் (Kick-off time) குறித்த அறிவிப்பு 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. குறிப்பாக கனடா முதல் முறையாக ஃபிடஃபா உலக கோப்பை விளையாட்டுகளை நடத்துகிறது. அமெரிக்கா 1994 போட்டிகளுக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக நடத்துகிறது.
இதனிடையே மெக்சிகோ மூன்றாவது முறையாக ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துகிறது. முன்னதாக, 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் ஃபிஃபா போட்டிகளை நடத்தியதன் மூலம் உலகின் முதல் நாடு இரண்டு முறை ஃபிஃபா போட்டியை நடத்திய பெருமையை மெக்சிகோ அடைந்திருந்து குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ஃபிஃபா பட்டியலில் 102வது இடத்தில் இருக்கும் இந்தியா, ஆசிய அளவிலான தகுதி சுற்றில் பங்கேற்று வருகிறது. முன்னதாக குவய்த் நாட்டிற்கு எதிரான போட்டியில் 0-1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்! 22 வயதில் பட்டம் வென்று அசத்தல்!