ETV Bharat / sports

"பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி நிச்சயம் வெண்கலம் வெல்லும்" - முன்னாள் கேப்டன் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி! - paris olympics 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024: இந்திய ஹாக்கி அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது குறித்தும் நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி குறித்தும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாடிப்பட்டி ராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணி, முன்னாள் கேப்டன் வாடிப்பட்டி ராஜா
இந்திய ஹாக்கி அணி, முன்னாள் கேப்டன் வாடிப்பட்டி ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 5:41 PM IST

சென்னை: ஒரு நாட்டின் சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டே அந்த நாட்டின் தேசிய விளையாட்டு என்று கருதப்படுகிறது. அவைகள் அந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு அந்த நாட்டு மக்களை அடையாளப்படுத்தவும் செய்கின்றன.

இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் வாடிப்பட்டி ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கடந்த 1975ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. மேலும், ஒலிம்பிக் ஹாக்கியில் அதிகம் தங்கம் வென்ற நாடு இந்தியாவாகும். தற்போது பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாகாணத்தில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய ஹாக்கி அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டு விளையாடினர். அதில் 4-2 என்ற கணக்கில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 6) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், நாளை (ஆக. 8 ) நடைபெறவுள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயின் ஹாக்கி அணியை சந்திக்க உள்ளது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தது குறித்தும் நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி குறித்தும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாடிப்பட்டி ராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்திய ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், ஒரு சில தவறுகளால் அரையிறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.

'இந்திய அணி செய்த தவறுகள்': கோல் அடிப்பதற்காக பந்தை பெனால்டி கார்னராக செலுத்துவதில் இந்திய ஹாக்கி அணி அதிகம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய நம் வீரர்கள் தவறவிட்டனர். அரையிறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வீரர் ஜர்மன் பிரீத் சிங் (Jarmanpreet Singh) டி-சர்கிளில் வந்த ஓவர்ஹட் பந்தை தடுத்ததால் பெனால்டி கார்னர் கொடுக்கப்பட்டது. அதனை ஜெர்மனி வீரர்கள் கோலாக மாற்றினர். அதுவே முதல் தவறாக இந்திய ஹாக்கி அணிக்கு அமைந்தது.

மற்றுமொரு இந்திய வீரர் அமித் ரெட் கார்ட் வாங்கியதால் அதுவும் நம் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ரெட் கார்ட் வாங்கி வெளியேறியதால் deep Defender-ஆக சிறப்பாக செயல்படக்கூடிய வீரரை இழந்ததால், ஜெர்மனி வீரர்கள் இலகுவாக பந்தை கோலாக மாற்றிவிட்டனர்.

ஆட்டத்தின் இறுதியிலும் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிட்டதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. இந்திய ஹாக்கி அணியினர் கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் ஒரு சில தவறுகளால் அரையிறுதிப் போட்டி தோல்வியில் முடிந்தது. இந்திய ஹாக்கி அணி நிச்சயமாக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது" என்று வாடிப்பட்டி ராஜா கூறினார்.

'ஆட்டமுறையை மாற்ற வேண்டும்': மேலும் அவர் கூறும்போது, "இந்திய ஹாக்கி அணியினர் கடந்த இரண்டு போட்டிகளில் தடுப்பாட்டம் (Defending) செய்வதில் முழு கவனமும் செலுத்தி ஆடினார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் அணிகளில் (Defending side) தடுப்பாட்டத்தை விட (Attacking) அடித்து ஆடுவதை தான் அதிகமாக விளையாடுவார்கள்.

எனவே இந்திய ஹாக்கி அணி அட்டாக்கிங் முறையில் ஆடுவதில் அதிக கவனம் செலுத்தி விளையாட வேண்டும். ஏனென்றால் 11 ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளுடன் (ஓவர்சீஸ் போட்டிகள்) விளையாடி இருக்கிறேன். எதிரணி Defending செய்து ஆட முயற்சித்தால் அவர்கள் அட்டாக்கிங் செய்து ஆட முயற்சி செய்வார்கள். இது அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே பயிற்சிவிக்கப்படுகிறது.

அவர்கள் அந்த முறையில் தான் விளையாடுவார்கள். அவர்களுக்கு ஏற்றாற்போல் இந்திய ஹாக்கி அணி வீரர்களும் விளையாட்டு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்திய ஹாக்கி அணி man to man விளையாடும்போது உறுதியுடன் விளையாட வேண்டும். தனியாக பந்தை எடுத்துச் செல்லும்போது எதிரணியிடம் மாட்டாமல் எதிரணியை கணித்து விளையாட வேண்டும்.

'சிறந்த கோல் கீப்பர்': இனிவரும் போட்டியில் இந்திய ஹாக்கி அணியினர் குழுவுடன் சேர்ந்து விளையாட வேண்டும். குறிப்பாக இந்திய அணியை பொறுத்தவரை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம். அவர் என்னுடன் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக விளையாடி வருகிறார். என்னுடைய தலைமையின் (கேப்டன்) கீழ் பல போட்டிகள் விளையாடி உள்ளார்.

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெண்கல பதக்கத்தை வெற்றி பெற்றாக வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பும் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற வேண்டும் என இருக்கிறது. கடந்த ஒலிம்பிக்கிலும் வெண்கலப் பதக்கம் வென்று நம் அணி சாதனை படைத்திருந்தது. அதே சாதனை மீண்டும் செய்ய வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று வாடிப்பட்டி ராஜா தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: ஒலிம்பிக் ஹாக்கி: இறுதிவரை போராடிய இந்திய அணி.. அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வி! - India vs Germany in Paris Olympics

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.