கயானா: ஐசிசி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், வெஸ்ட் இண்டீசின் காயனாவில் இன்று நடைபெறுகிறது. அங்குள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்.
🚨 UPDATE from Guyana 🚨
— BCCI (@BCCI) June 27, 2024
Toss delayed due to rain 🌧️
Stay Tuned for more updates. ⌛️
Follow The Match ▶️ https://t.co/1vPO2Y5ALw #T20WorldCup | #TeamIndia | #INDvENG
📸 ICC pic.twitter.com/kNLLjbv4El
ஆனால் போட்டி நடைபெறும் மைதானத்தில் கடந்த சில மணி நேரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்போட்டியை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இருநாட்டு ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தற்போது மழை விட்டுள்ளதால் கூடியவிரைவில் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கயானாவில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை கருத்தில் கொண்டே, இன்றைய போட்டிக்கு 250 நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை வென்று இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை; மழை குறுக்கிட்டால் இந்தியா பைனலுக்குள் நுழையுமா?