ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக்கை வைத்து ரூ.16 கோடி வருமானம் பார்த்தாரா வினேஷ் போகத்? உண்மை என்ன? - Vinesh Phogat prize money - VINESH PHOGAT PRIZE MONEY

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஏறத்தாழ 16 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியதாக செய்தி வெளியான நிலையில், அது குறித்து அவரது கணவர் சோம்வீர் ரதி விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Vinesh Phogat (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 1:23 PM IST

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார். 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட அவர், இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் குறிப்பிட்ட எடையை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிய வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அண்மையில் வினேஷ் போக்த் நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு குடும்ப உறுப்பினர்கள், சக விளையாட்டு வீரர் வீராங்கனைகள், ரசிகர்கள் என உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஹரியானாவில் உள்ள அவரது சொந்த கிராமமான சர்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள பலாலி கிராமம் வரை அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, வினேஷ் போகத்தின் சொந்த கிராமத்தில் அவருக்கு பாராட்டு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. அவருக்கு தங்க பதக்கம் முதல் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் வினேஷ் போகத்துக்கு, தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு விழாவில் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், சர்வதேச ஜாட் சமூக மக்கள் சார்பில் 2 கோடி ரூபாய், ஹரியானா வர்த்தக அமைப்புகள் மற்றும் பஞ்சாப் ஜாட் அமைப்புகள் சார்பில் உதவித் தொகை என மொத்தம் 16 கோடியே 30 லட்ச ரூபாய் அளவில் பரிசுத் தொகை கிடைத்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பதிவுக்கு வினேஷ் போகத்தின் கணவர் சோம்வீர ரதி முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோம்வீர் ரதி தனது எக்ஸ் பக்கத்தில், வினேஷ் போகத்து யாரிடம் இருந்து பணம் பெறவில்லை, எந்த அமைப்பும் அவருக்கு பண உதவியோ, பரிசுத் தொகையோ வழங்கவில்லை.

தொழிலதிபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட யாரும் வினேஷ் போகத்துக்கு உதவித் தொகை எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தவறான தகவல்களை எதையும் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் இதனால் நமக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது, ஒட்டுமொத்த சமூக மதிப்புகளும் பாதிக்கப்படும், இது மலிவான பிரபலத்தைப் பெறுவதற்கான ஒரு வழி என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: இந்தியாவுக்கு எந்த இடம்? - WTC RANKING

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.